கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா?

Posted on ஜூன் 18, 2011 by vimarisanam – kavirimainthan

p1

ஜூன் 17,1911 – திருநெல்வேலி  வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ்   மணியாச்சி ரயில் நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டி ஒன்றில்
சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.100 ஆண்டு காலம்  ஆகிறது இன்றுடன்.

கலெக்டரை சுட்டுக்கொன்றது புரட்சி வீரன் வாஞ்சிநாதன் என்கிற25 வயது சுதந்திர தாகம் கொண்ட இளைஞன்.

கலெக்டரை சுட்டுக்கொன்ற பிறகு, போலீசில் பிடிபடாமல் இருக்க தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீர மரணம் எய்தினான் வாஞ்சிநாதன்.

அதற்கும் இன்றுடன் நூறு ஆண்டுக்காலம் நிறைவடைகிறது.

திருநெல்வேலியில் கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சி.அவர்களை சிறையில் தள்ளி, சொல்லோணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கியவன் கலெக்டர் ஆஷ்.

அவனைப் பழி தீர்க்கத் துடித்தனர் வீரத் தமிழ் இளைஞர்கள்……

நிறைய பேர் இந்தப் பொறுப்பினை ஏற்க துடிப்புடன் இருந்ததால், அவர்களுக்குள்  சீட்டுக்குலுக்கி எடுக்கப்பட்டு வாஞ்சிநாதனின் பெயர்  தேர்ந்தெடுக்கப்பட்டது.மிகப் பெருமையுடன்இந்தப் பணியை நிறைவேற்றினான் வாஞ்சிநாதன்.

வாஞ்சிநாதனைப் போல் எத்தனை எத்தனையோ பேர் இந்த மண்ணின் சுதந்திரத்திற்காக சிறை சென்றனர். செக்கிழுத்தனர்
தங்கள்இளமையைமுழுவதுமாகவெஞ்சிறையில்வாடிக்கழித்தனர்.

-தங்கள் இன்னுயிரையும் தந்தனர்.
எல்லாம்  எதற்காக ?

 

வயிறு  எரிகிறது அத்தனையும் எதற்கு ? அந்த வெள்ளைக்காரர்கள் போய் – இந்த கொள்ளைக்காரர்கள் சுருட்டவா இத்தனை  தியாகங்கள் செய்யப்பட்டன?

யார் என்ன சொன்னாலும், மக்கள் பட்டினி கிடந்தாலும், போராட்டம் நடத்தினாலும், உயிரையே விட்டாலும், எல்லாரையும் ஏமாற்றுகிறது காங்கிரஸ் தலைமை மத்திய  காங்கிரஸ்   அரசு.

 

இதற்கு முன்னால் என்றாவது பார்த்திருக்கிறோமா மத்திய அரசின்
மூன்று சீனியர் அமைச்சர்கள் ஒன்றாகச் சேர்ந்து செய்தியாளர்களுக்கு தொலைக்காட்சிகளில் நேரடியாகப் பேட்டி(live telecast interview) கொடுத்த அதிசயத்தை ?

வரலாற்றிலேயே இல்லாத விதமாக நேற்று – ப.சி., கபில் சிபல், சல்மான் குர்ஷித் ஆகிய 3 மத்திய கேபினட் அமைச்சர்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். எதற்காக ?

அன்னா ஹஜாரே குழுவினர்களுக்கு அனுபவமில்லை, முதிர்ந்த அறிவு இல்லை,
தகுதியும் இல்லை அரசியல் சட்டமும் தெரியவில்லை.
ஒன்றும் தெரியாத அவர்களை வைத்துக்கொண்டு உருப்படியாக எதுவும் செய்ய முடியாது.

அற்புதமான லோக்பால் மசோதாவை மத்திய அரசே கொண்டு வரும்.   அது யாருடைய வற்புறுத்தலாலும் இருக்காது. சுயமாகவே காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் இதில் ஏற்கெனவே தீவிரமாக (45 வருடங்களாக ?)ஈடுபட்டுள்ளன !

–  என்று கூறுவதற்காக.

 

திரும்பத் திரும்ப ஏளனமாகவும்,  இளக்காரமாகவும், பார்ப்பவர்கள் எல்லாம் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டும் தொலைக்காட்சியில் பேசுகிறார்கள்.

இவர்கள்  இத்தனை பேசுவதற்கு பதில்-  வேலை மெனக்கெட்டு எல்லாரையும் திசை திருப்புவதற்கு  பதிலாக –  வெறும் அரை மணி நேரம் – 30 நிமிடங்கள்  மட்டும்  செலவழித்து மத்திய அமைச்சரவையில் ஒரு தீர்மானம் போட்டால் போதும் –

 மத்திய அரசின் சார்பாக ஒரே ஒரு உத்திரவு 
போட்டால் போதும்

 

வெளிநாடுகளில்  உள்ள வங்கிகளில், இந்தியர்களால் போட்டு வைக்கப்பட்டுள்ள பணம் அனைத்தும்  உடனடியாக இந்திய தேசத்தின்  உடைமை நாட்டுடைமை ஆக்கப்படுகிறது 
என்று ஒரு அவசர  சட்டத்தை பிரகடனம் செய்தால் போதும்.

அத்தனை கருப்புப் பணமும்  நம் வசம் வந்து விடும்.
நியாயமான வழிகளில் சம்பாதிக்கப்பட்டு போடப்பட்ட பணமாக இருந்தால் – உரியவர்கள்  அதற்கான ஆதாரத்தை  அரசாங்கத்திடம் தந்து விட்டு தங்கள் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்  
என்று  அதிலேயே ஒரு ஷரத்து சேர்த்து விட்டால் போதும்.

உலக அளவில் செல்லத்தக்கதாகி விடும் இந்த சட்டம்.

அதைச் செய்வார்களா இந்த ……..  ?

மாட்டார்கள்.  மாட்டவே மாட்டார்கள்.
செய்தால் மாட்டுவது அவர்கள் அன்னையும் தந்தையுமாகவே இருப்பார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருப்பதால் தானே வெறும் வார்த்தைகளிலேயே  காலத்தை
ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓடாது இது நீண்ட காலம்  ஓடாது.
புதிய வாஞ்சிநாதன்கள்  வருவார்கள்.
ஆனால் அவர்களது  வழிமுறைகள்

இப்படி இருக்காது –
வித்தியாசமாகவே  இருக்கும் !

——————————————————————————–

பின் குறிப்பு –  (05/04/2015)

இந்த  இடுகையை நான் எழுதியது  4 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில்காங்கிரஸ் கூட்டணி அரசு  ஆட்சியில் இருந்தபோது…….

 

புதிய வாஞ்சிநாதன்கள் வருவார்கள்வெளிநாட்டில் லட்சக்கணக்கான கோடிகளில் புதைந்து கிடக்கும் கருப்புப் பணம் இந்தியா வரும் – தாய்த்திருநாட்டில்  வளம் கொழிக்கும் என்று தான்எல்லாரும் நம்பினார்கள் – ( என்னையும் சேர்த்து தான் ..!)

 

ஆட்சி மாறியது – 

காங்கிரஸ் கூட்டணி போய் – பாஜக வின்  தனி மெஜாரிட்டி ஆட்சி வந்தது …..! ஒரு ஆண்டுக்கால ஆட்சியும் முடிகிறது…..

ஆனால் ……. நாம் எதிர்பார்ப்புகள் நிறைவேறினவாகாங்கிரஸ் செய்யத்தவறியதை, பாஜக  செய்திருக்கிறதா ?

மாற்றத்தால்மக்கள்  மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா …? அவரவர்  தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி …..!!!

 

இந்த மின்புத்தகத்தில் இருக்கும் இடுகைகள் பற்றி கருத்து கூறவிரும்பும் நண்பர்கள் எனக்கு கீழ்க்கண்ட விலாசத்திற்கு ஈமெயில் அனுப்பலாம். அவர்கள்  கருத்துக்கள் விமரிசனம் வலைத்தளத்தில் வெளிவரும். அதனைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களிலும் அவர்கள் கலந்து கொள்ளலாம்.

என் e-mail  ID  –      kavirimainthan@gmail.com

—————————————

கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா? க்கு 4 பதில்கள்

1.    Ganpat சொல்கிறார்:

3:15 முப இல் ஜூன் 19, 2011 (மேம்படுத்து) அன்புள்ள காவிரிமைந்தன்,

 

நீங்கள் கூறியவற்றை BJP செய்வார்களா?(அவர்கள் ஆட்சி அமைத்தால்?)

இப்போது நிர்வாகத்தில் மிக சிறந்த மாநிலம் என அனைவராலும் கருதப்படுவது குஜராத் .அங்கு BJP அரசு .மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் BJP அரசுதான் .அவர்கள் ஏன் அங்கும் குஜராத் Model ஐயே நடைமுறைப்படுத்தக்கூடாது?செய்யவிடாமல் தடுப்பது எது?

நன்றி

 

பி.கு : உங்களுக்கு நன்றாகத்தெரியும்.நான் உங்களைவிட பலமடங்கு அதிகமாக காங்கிரசை “நேசிப்பவன்” என்று!!நான் சொல்ல வருவது என்னவென்றால்,நம்மால் எது தீயது என உறுதியாக அடையாளம் காட்ட முடிகிறது .ஆனால் எது நல்லது என்றுதான் தெரியவில்லை.

  • o vimarisanam – kavirimainthanசொல்கிறார்:

4:51 பிப இல் ஜூன் 19, 2011 (மேம்படுத்து)

வருக நண்பர் கண்பத், ராஜசேகர் –

1) பிஜெபி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் சரியாகி விடும் என்று சொல்ல நான் தயாராக இல்லை !

2) என்னுடைய அனுபவம் – எல்லாமே தலைமையை பொறுத்தது தான்.

ஒரு நல்ல தலைமையின் கீழ் அமையக்கூடிய அரசு தான் சிறந்த அரசாக இருக்க முடியும். (அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி !) இதற்கு உதாரணம் தான் கர்நாடகா.. கர்நாடகாவில் பிஜெபி அநேகமாக எடியூரப்பாவை சார்ந்தே இருக்கிறது.– எடியூரப்பாவை நீக்கினால் –
பிஜெபி ஆட்சியை இழக்க நேரிடும்.

எனவே கட்சித்தலைமை – தென் இந்தியாவில் அமைந்த ஒரே ஒரு பிஜெபி அரசை இழக்க விரும்பாமல் எடியூரப்பாவை சகித்துக் கொண்டிருக்கிறது.  இது பிஜெ பி    தலைமையின் கம்ப்ரமைஸ்..

அந்த கம்ப்ரமைஸ் கட்சியின் கௌரவத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது.

3) ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமே – இருப்பதற்குள் எது தேவலை என்று தீர்மானிக்கும் அளவிற்கு தான் நமக்கு வாய்ப்பு இருக்கிறது.

The option to select the best is not available
to us in democracy.
we have the option only to select the
better among the lot.

எனவே – ஒரு நல்ல சர்வாதிகாரி கிடைக்கும் வரை ( ! )

– நாம் இருப்பதற்குள் நல்லதை
தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியது தான் !

சரி தானே ?

-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்

1.   RAJASEKHAR.P சொல்கிறார்:

நம்மால் எது தீயது என உறுதியாக அடையாளம் காட்ட முடிகிறது .ஆனால் எது நல்லது என்றுதான் தெரியவில்லை.

gold line ganpat…………..

thakns & blessings all of u
rajasekhar.p

  1. madhuசொல்கிறார்:6:31 முப இல் ஜூன் 20, 2011 (மேம்படுத்து)

when congress in power india never rise but sonia &ragul will rise

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book