மகாத்மாவும் கூட ….

Posted on ஜூன் 16, 2011 by vimarisanam – kavirimainthan

chap4a

அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன்.
அதில் வந்திருக்கும் காந்திஜி பற்றிய ஒரு 
செய்தி  அதிர்ச்சியை அளித்தது.

80 ஆண்டுகளுக்கு முன்பே காந்திஜியும் 
இன்றைய  சராசரி அரசியல்வாதிகளைப் 
போல தான் நடந்து 
கொண்டிருக்கிறார் !

கட்டுரையிலிருந்து ஒரு பகுதி —

டில்லி பார்லிமெண்டில் வெடிகுண்டு வீசிய
வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் 
30 பேரும் கைது செய்யப்பட்டு லாகூர் 
சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது ‘லாகூர் சதி வழக்கு’ எனப்பட்டது.

லாகூர் சதி வழக்கில் வங்காளத்தைச் 
சேர்ந்த ஜாதீன் தாஸ் என்பவரும் ஒரு 
குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். 
இவர் சுபாஷ் சந்திர போசுக்கு
மிகவும் வேண்டப்பட்டவர்.

லாகூர் சிறையில் குற்றவாளிகள் மிகவும்
சித்திரவதைக்கு ஆளாயினர். அரசியல்
சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளான 
குற்றவாளிகளை அரசியல் குற்றவாளிகள் 
போல் நடத்த வேண்டும் என்று 
ஜாதீன் தாஸ்  சிறையில் உண்ணாவிரதம் இருக்க
ஆரம்பித்தார்.
நேரு அவரை சிறையில் சந்தித்து
உண்ணாவிரதத்தை நிறுத்த முயற்சித்தார்.
முடியவில்லை.

மொத்தம் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து
ஜாதீன் தாஸ் 1929ம் ஆண்டு செப்டம்பர் 
12ந்தேதி மரணம் அடைந்தார்.அவர் உடலை
அடக்கம் செய்ய மராட்டியம், பஞ்சாப், வங்காள
மாநிலங்கள் போட்டியிட்டன.

இறுதியில் சுபாஷ் சந்திர போஸ் விரும்பியபடி,
ஜாதீன் தாஸின் உடல் லாகூரிலிருந்து,
கல்கத்தாவிற்கு, தனி ரெயிலில் கொண்டு 
வரப்பட்டது. வழி நெடுகிலும், லட்சக்கணக்கான
இந்தியர்கள் அவரது உடலுக்கு மரியாதை 
செய்தனர்.

கல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஜாதீன் தாஸின் உடலைப் பெற்று தகனம் 
செய்தார்.
ஆயிரக்கணக்கான  ஆண்களும், பெண்களும்,
அவரின் சாம்பலை எடுத்து நெற்றியில் 
இட்டுக்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை 
ஒழிப்போம்என்று சபதம் எடுத்தனர்.

ஆனால் – காந்திஜி, ஜாதீன் தாஸின் 
உண்ணாவிரதத்தால் உண்டான மரணத்தை கண்டு 
கொள்ளவே இல்லை ! ஒரு வார்த்தை கூட
வருத்தமும் தெரிவிக்கவில்லை !

அவர் ஆசிரியராக இருந்த யங் இந்தியாவில்,
பொதுவாக  எல்லா செய்திகளும் வரும்.
ஆனால், இளைஞர் ஜாதீன் தாஸின் 
உண்ணாவிரதத்தையும், அதனால் நிகழ்ந்த 
சாவையும் பற்றி ஒரு வரி கூட 
செய்தி வரவில்லை.

மோதிலால் நேரு,தனக்குப் பின் தன் மகன்
தலைவனாக வருவதிலேயே குறியாக இருந்தார்.
அதே நேரத்தில்,  நேருவும், சுபாஷ் சந்திர 
போசும் இணைந்து இருப்பது காந்திஜிக்கு
பிடிக்கவில்லை. இவர்களைப் பிரித்து,
காங்கிரசில்  இடதுசாரிகளின் தாக்கத்தை 
குறைக்க எண்ணினார்  காந்திஜி.
எனவே  நேருவைத் தலைவராக்கினார்.

நேருவே, தன் சுயசரிதையில், “நான் 
காங்கிரஸ் தலைமைப் பதவியை,
முன்புற வழியாகவோ,
பின்புற வழியாகவோ சென்று அடையவில்லை.
ஒரு மர்மக் கதவின் மூலமே அடைந்தேன்
என்று கூறி இருக்கிறார் !

மகாத்மாவும் கூட …. க்கு 4 பதில்கள்

1.                              Ezhil சொல்கிறார்:

9:52 பிப இல் ஜூன் 16, 2011 (மேம்படுத்து)

பெரோஸ் கானை பெரோஸ் காந்தி ஆகியவர் மகாத்மா காந்தி. ஆனால் இதை பற்றி ஒரு வரி கூட தனது சத்திய சோதனை புத்தகத்தில் குறிப்பிட படவில்லை என்று கூறபடுகிறது. அது உண்மை ஆயின் இதிலும் காந்திக்கு உள்நோக்கம் இருப்பதாகவே கருத வாய்ப்பு உண்டு. அது மட்டுமல்ல உண்மையில் இப்போது காமெடி பண்ணுவது ராகுல் காந்தி அல்ல. ராகுல் கான்.

2.                              RAJASEKHAR.P சொல்கிறார்:

1:54 பிப இல் ஜூன் 18, 2011 (மேம்படுத்து)

http://www.wordiq.com/definition/Feroze_Gandhi

Thanks & blessings all of u
rajasekhar.p

  • o vimarisanam – kavirimainthanசொல்கிறார்:

2:47 பிப இல் ஜூன் 18, 2011 (மேம்படுத்து)


வருக நண்பர் ராஜசேகர்.

நல்ல தகவலுக்கு மிக்க நன்றி.

பழைய சரித்திரங்களைப் புரட்டினால்
எவ்வளவு விசித்திரமான தகவல்கள்
எல்லாம் கிடைக்கின்றன !

வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்

  1. Ezhilசொல்கிறார்:

7:35 பிப இல் ஜூன் 18, 2011 (மேம்படுத்து)

தெளிவு படுத்தியமைக்கு நன்றி திரு ராஜசேகர். அதற்க்கு வழி அமைத்த காவிரி மைந்தன் அவர்களுக்கும் நன்றி. காந்தியின் இந்த செயலுக்கு பிற்காலத்தில் நண்பரின் மகள் நாடாள பெயர் தடையாய் இருக்க கூடாது என்ற சுயநலத்தையும் குறுக்கு புத்தியையும் தவிர வேறு காரணம் இருப்பதாக தோன்றவில்லை.

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book