இந்த கருப்புப் புலி – உளவாளியா ? தேசபக்தனா ? அவனுக்கு ஏனித்தனை அவதிகள்….?

Posted on மார்ச் 30, 2015 by vimarisanam – kavirimainthan

அயோக்கியர்களும், அரசியல்வாதிகளும் சகல மரியாதைகளுடன்” உலா வரும் இந்த நாட்டில் தேசத்திற்காக உழைத்து, பகைநாட்டின் சிறையில் சித்திரவதைப்பட்டு, கேட்க நாதியின்றி செத்துப்போகும் இந்த மனிதனின் பின்னணியைக் கேட்க, ரத்தக்கண்ணீர் தான் வருகிறது.

 

இத்தகைய செய்திகளைக் கேட்ட பிறகும் நாம் நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க முடிகிறதா ….? நம் நெஞ்சை உருக்கவில்லையா இந்த நிகழ்ச்சி…? இது போல் இன்னும் எத்தனையோ அவலங்கள் இங்கு …. இதை எல்லாம் மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு நமக்கில்லையா …

Chap7a

 

ரவீந்தர் கௌசிக், பிறந்தது, ஏப்ரல் 11 1952 – சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தின் கங்கா நகர். அற்புதமான நாடகக் கலைஞனான ரவீந்தர் கௌசிக், லக்னோவில் நிகழ்ந்த தேசிய அளவிலான நாடக விழா ஒன்றில் கலந்து கொண்டு

தன் திறமையை காட்டியது அவனது வாழ்வையே திருப்பிப் போடும் ஒரு நிகழ்ச்சியாக
அமைந்து விட்டது.

அந்த நிகழ்ச்சியைக் காண வந்திருந்த இந்திய புலனாய்வு நிறுவனமான – Indian Intelligence Agency RAW-வைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வித்தியாசமான கோணத்தில் ரவீந்தரைப் பார்த்தனர். .

விளைவு இந்திய உளவு நிறுவனத்தின் சார்பாக,
பாகிஸ்தானில் ஒரு ரகசிய ஒற்றராகப் பணி புரிய ரவீந்தரைத் தேர்ந்தெடுத்தனர்,  அவனுக்கு நல்ல எதிர்காலமும், தியமும் தருவதாகச் சொல்லி அவனை பணிக்குச் சேர்த்துக் கொண்டனர்.


இரண்டு வருட காலம் டெல்லியில் அவனுக்கு மிகத்தீவிரமான பயிற்சி கொடுக்கப்பட்டது.  பாகிஸ்தானில் பேசப்படும் பஞ்சாபி மொழிஏற்கெனவே அவனுக்கு நல்ல பரிச்சயம்.  உருது மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது.

.

இஸ்லாமியர்கள் செய்து கொள்ளும் சுன்னத்தும் அவனுக்கு செய்விக்கப்பட்டது . இஸ்லாமிய அறிவும் மத , பழக்க வழக்கங்களும் சொல்லிக்கொடுக்கப்பட்டன.

சுருங்கச் சொல்வதானால், பாகிஸ்தானில் வழக்கமாக வாழும் ஒரு இஸ்லாமியரைப்போல வாழ எந்தெந்த வகையில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமோ அத்தனையும் அவனுக்கு செய்துவைக்கப்பட்டது சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பின்னர்ரவீந்தரின் 23வது வயதில், 1975-ல் நபி அஹமது ஷகிர்என்று பெயர் சூட்டப்பட்டு, அவன் ரகசியமாக பாகிஸ்தானுக்குள் அனுப்பி வைக்கப்பட்டான்.

 

பாகிஸ்தானுக்குச் சென்று, பாகிஸ்தான் குடிமகனாக வாழத்துவங்கிய அவன் கராச்சி யுனிவர்சிடியில் சேர்ந்து, எல்.எல்.பி. படித்தான். ( அதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் “ரா”வால் தயாரித்துக் கொடுக்கப்பட்டன ).

பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தில் ஒரு
கமிஷன் தேர்வு பெற்ற அதிகாரியாக பணி வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் ராணுவ அமைப்பிற்குள் நுழைந்தான்.
விரைவில் மேஜராக பதவி உயர்வும் கிடைத்தது. அமானத்என்கிற பெயருடைய உள்ளூர் இஸ்லாமியப் பெண் ஒருவரை மணந்து கொண்டு ஒரு ஆண் மகனுக்கு தந்தையாகவும் ஆனான்.

1975 முதல் 1983 வரையான காலத்தில்,
பாகிஸ்தான் ராணுவம் குறித்த பல தகவல்களை, அனுப்பி வைத்து, எந்தெந்த விதத்திலெல்லாம், இந்திய ராணுவத்திற்கு உதவ முடியுமோ – அத்தனையையும் செய்து கொண்டிருந்தான்.

இந்த கால கட்டத்தில், அவனது பாகிஸ்தான் நிலையை வெளியில் அறிவிக்காமலே, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால், அமைச்சரால் – “கருப்புப்புலி” (‘Black Tiger’ ) பட்டமும் கொடுக்கப்பட்டதாம்.

இந்த கால கட்டங்களில் இந்திய ராணுவத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழவிருந்த பல இழப்புகள் மோதல்கள், ரவீந்தர் கௌசிக் பரிமாறிக்கொண்ட தகவல்களால் தவிர்க்கப்பட்டன.
ரவீந்தரின் மூலம் இந்திய ராணுவத்திற்கு விலைமதிக்க முடியாதரகசிய தகவல்கள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு, பாகிஸ்தானை முந்திச்சென்று மடக்கக்கூடிய வசதிகள் இந்திய ராணுவத்திற்கு கிடைத்து வந்தது.

 

செப்டம்பர், 1983-ல், விதி ரவீந்தரின் வழியில் இனியத் மசிஹா” என்கிற இன்னொரு இந்திய ஒற்றரின் உருவத்தில் குறுக்கிட்டது.
“கருப்புப் புலி” யை நேரில் சந்தித்து சில தகவல்களை
பெறுவதற்காக, இந்திய உளவு நிறுவனம் “ரா” அனுப்பி வைத்த இன்னொரு ஒற்றன் தான் இனியத் மசிஹா. எதிர்பாராத வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவனை மோப்பம் பிடித்து கைது செய்து விட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் சித்திரவதையை தாங்கிக்கொள்ள முடியாத இனியத் மசிஹா, ரவீந்தர் கௌசிக் பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த விவரங்களை அவர்களிடம் வெளியிட்டு விட்டான்.

 

ரவீந்தர் கௌசிக்கை உடனடியாக சுற்றிவளைத்து, கைது செய்த பாகிஸ்தான் அதிகாரிகள் அவனை சியால்கோட் சிறையில் வைத்து இரண்டு வருடங்கள் பயங்கர சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.
இறுதியில் அவன் மீது உளவு பார்த்த குற்றம் சுமத்தப்பட்டு, 1985-ல் தூக்கு தண்டனைவிதிக்கப்பட்டதுசில ஆண்டுகள் கழித்து
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால், தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, ரவீந்தர் நிரந்தரமாக பாகிஸ்தானின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டான்.

பதினாறு  (16 ) நீண்ட நெடிய ஆண்டுகள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் ( Sialkot, Kot Lakhpat and Mianwali jail ) ரவீந்தர் வதைபட்டதில், உடல்நிலை சீர்கெட்டு, “ஆஸ்த்மாவும்,
காசநோயும்” (  அவனை உயிரோடு அழித்துக் கொண்டிருந்தன ).

 

சிறையில் இருந்த காலங்களில், சில சமயங்களில் அவனால் – இந்தியாவிலிருந்த அவனது தாய், சகோதரன் போன்றவர்களுக்கு சில தகவல்களை/கடிதங்களை ரகசியமாக அனுப்ப முடிந்தது. தன் துயரங்களை எல்லாம் அவற்றில் வடித்திருந்த கௌசிக் –

பாரதத்தைப் போன்ற இவ்வளவு பெரிய தேசத்தில்,
நாட்டிற்காக தியாகம் செய்பவர்களுக்கு இது தான் பரிசா..? ”

( ” Kya Bharat jaise bade desh ke liye kurbani dene waalon ko yahi milta hai? ” ) என்று வருந்தி அழுதிருக்கிறான்.

2001, நவம்பர் 21 அன்று பாகிஸ்தானின் மூல்தான் சிறையில் ( New Central Jail Multan ) தன் நோய்க்கொடுமை காரணமாக இறந்த ரவீந்தர் கௌசிக், ஜெயிலின் பின்புறம் இருந்த
இடுகாட்டிலேயே எந்தவித சடங்கும், மரியாதையுமின்றிஏனென்று கேட்கக்கூட நாதியற்ற அநாதைப் பிணமாக புதைக்கப்பட்டான்.

ரவீந்தர் கௌசிக் இறந்த பிறகு, இந்தியாவிலிருக்கும் அவனது குடும்பத்தினர்  ( தாயும்   சகோதரன் ஆர்..கௌசிக்கும் )  பலமுறை இந்திய ராணுவத்திற்கு, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு,
ஜனாதிபதிக்கு -பல விண்ணப்பங்கள் அனுப்பினர்.

நாங்கள் எந்தவித பண உதவியோ, சலுகைகளையோ அரசிடமிருந்து எதிர்பார்க்கவில்லை கௌசிக் ரவீந்தர்   இந்திய
ராணுவத்தைச் சேர்ந்தவர் என்கிற அங்கீகாரத்தைக் கொடுத்து– 


ஒரு சாதாரண ராணுவ வீரர் இறந்து போனால் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதைகளையாவது அவருக்கு கொடுங்கள்
என்று தான் கேட்கிறோம்” – இது தான் அந்த குடும்பத்தின் வேண்டுகோள்.

ஆனால் இன்றுவரை ரவீந்தர் கௌசிக் என்கிற அந்த
உயர்ந்த மனிதனை உன்னத தியாகியை இந்த நாட்டின் அரசு எந்த விதத்திலும், வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை – கௌரவிக்கவில்லை என்பது தான் பரிதாபம்….

 

————————————

இந்த கருப்புப் புலி உளவாளியா ? தேசபக்தனா ? அவனுக்கு ஏனித்தனை அவதிகள்….? க்கு 12 பதில்கள்

1.                  சக்தி சொல்கிறார்:

12:55 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

Ek Tha Tiger என்ற பெயரில் ஒரு படமும் சில மாற்றங்களுடன் உருவானது. அதை எதிர்த்து ரவீந்தர் குடும்போத்தினர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர் எனப் படித்திருந்தேன்.

ரவீன்தர் இறப்பு பற்றி தெலுங்கு மொழியில் ஒரு தொலைக்காட்சி -v6news- விபரமான செய்தித் தொகுப்பு வெளியிட்டிருந்தது. தெலுங்கு மொழி தெரிந்தவர்கள் பார்க்கலாம். மொழி மாற்றம் செய்தும் பார்க்கலாம்.

மறுமொழி

  • o vimarisanam – kavirimainthanசொல்கிறார்:

3:18 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

நண்பர் சக்தி,

வீடியோ பார்த்தேன்.
இந்த இடுகையில் எழுதப்பட்டுள்ளது
அனைத்தையும் அதுவும் உறுதி செய்கிறது.
நன்றி.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

மறுமொழி

2.                  S.Selvarajan சொல்கிறார்:

2:26 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

ஒரு சாதாரண ராணுவ வீரர் இறந்து போனால் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதைகளையாவது அவருக்கு கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்” – இது தான் அந்த குடும்பத்தின் வேண்டுகோள்….. ! கிரிமினல்களுக்கு எல்லாம் பட்டம் — பதவி — கொடுக்கின்றவர்களும் —- எவனெவனுக்கோ ” கோயில் கட்டிட ” நினைப்பவர்களும் நிறைந்த இந்த நாட்டில் — இதை எல்லாம் மாற்ற வேண்டிய கடமை, பொறுப்பு நமக்கில்லையா […] கண்டிப்பாக இருக்கிறது — காலம் வரும்போது செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கையும் இருக்கிறது ….. !! இருந்தும் ” யாரை சொல்லி என்ன லாபம் — கானல் நீரை ” தேடுவது போல நமது நிலைமை — செவிடன் காதில் ஊதிய சங்கை போல — அரசுகள் உள்ளதால் — தற்போது கருத்தை பரிமாற மட்டுமே முடிகிறது ….!!! ஆதங்கத்துடன் —– நன்றி கெட்ட மாந்தரடா —- நாமறிந்த பாடமடா என்று பாட தோன்றுகிறது …….

மறுமொழி

  • o divmeeசொல்கிறார்:

6:33 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

உதாரணம் புரியவில்லை. கானல் நீரை எதற்கு தேட வேண்டும்?. புரியும்படி சொன்னால் தேவலை. Mr. Selvarajan.
காமைஜி,
ஒற்றர்கள் என்ற சொல்லே, அனைத்துக்கும் பொருள் தரும். தங்களுக்கு தெரியாததல்ல. ்சொந்தம் ஒப்புக் கொண்டாலும், அரசால் ஒப்புக்கொள்ள முடியாது. முதலில் வீழ்வது களவீரர் என்னாளும். எந்த நாட்டு அரசாலும் ஒற்றனை அனுப்பினோம் என்று தைரியமாக கூறி, விண்ணப்பிக்கும் மரியாதையை அவர்களுக்கு கொடுக்க முடியாது. சில விசயம் திரைமறைவில் தான் நடக்கும். நடக்க வேண்டும். அவர்கள் 15 வருடங்களாக புலம்புவது வேதனைக்குரிய விசயந்தான்.

மறுமொழி

  • சக்திசொல்கிறார்:

8:13 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

ஒற்றர் பற்றி நீங்கள் குறிப்பிட்டது சரியாக இருந்தாலும்,இந்தப் பதிவு விசயத்தில் தவறாகும். ஏனெனில் கௌசிக் மீதான பாகிஸ்தான் சித்திரவதை இந்திராகாந்தி ஆட்சியில் நடந்தது. ரவிந்தர் மீதான சித்திரவதை அன்று கண்டிக்கப்பட்டதும், அப்போதய உள்துறை அமைச்சர் சௌவானால் கறுப்புப்புலி-Black Tiger-என அவர் அழைக்கப்பட்டதும் அதை இந்திராகாந்தி ஏற்றுக் கொண்டதையும் மறந்துவிட முடியாது.

எப்படி சுதந்திர போராட்டக் காலத்தில் 18 – 30 வயதிற்கு உட்பட்ட பல மரண தண்டனை பெற்ற போராளிகளை நாம் மறந்தது போல் இவரையும் மறந்ததும், குடும்பத்தினரின் கோரிக்கைகளைக் கூட உதாசீனம் செய்ததும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை சிறிது சிந்தித்துப் பார்க்கலாம்.

நான் படித்த வரையில் ராஜ்குரு பகத்சிங்க் போன்றவர்கள் தவிர, சரபா 19 வயதிலும்,சந்திரசேகர் 24 வயதிலும், ராம் பிரசாத் 30 வயதிலும், கான் 27 வயதிலும், குடிரம் போஸ் 18 வயதிலும், இதைவிட தமிழ் நாட்டை சேர்ந்த பலர்,பெண் போராளிகள் பலர் மரண தண்டனை சித்திரவதை பெற்றிருந்தும் எல்லாரையும் நாம் மறந்து விட்டோமே! வரலாற்றில் பதியப்பட்ட இவர்களை மறந்து விட்டது சரியானதா?

மறுமொழி

  • Kauffmanசொல்கிறார்:

3:25 முப இல் மார்ச் 31, 2015 (மேம்படுத்து)

Sakthi, your point is worth!

மறுமொழி

  • vimarisanam – kavirimainthanசொல்கிறார்:

8:33 முப இல் மார்ச் 31, 2015 (மேம்படுத்து)

நண்பர் சக்தி,

திருமதி இந்திரா காந்தி காலத்தில் இது குறித்து விவாதத்திற்கு வந்தது என் நினைவில் இல்லை… இருந்திருந்தால் நிச்சயம் அதையும் குறிப்பிட்டிருப்பேன்.

ரவீந்தர் கௌசிக் உயிரோடு இருந்த வரை, அவரை ஒற்றர்
என்று இந்திய அரசு ஒப்புக்கொள்ளாததை நியாயப்படுத்த முடியும். ஆனால், அவர் இறந்த பிறகு – நிச்சயமாக கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.

ஒரு ராணுவ வீரர் பதவியில் இருக்கும்போது வீர மரணம்
அடைய நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படும்
அத்தனை மரியாதைகளும், உதவிகளும் இந்திய அரசால்
ரவீந்தர் கௌசிக்கின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அது இன்று வரை நிகழவில்லை என்பது தான் வருத்தம்.

மேலும், நீங்கள் கூறியது போல், இந்திய சுதந்திரத்திற்காக
இன்னுயிரைத் தியாகம் செய்த அனைவரையும் கௌரவப்படுத்தும் வகையில், மத்திய அரசு எந்த வகையிலாவது முயற்சி எடுக்க வேண்டும்……

உண்மையான தேச பக்தி உணர்வு உள்ளவர்கள் ஆட்சியில் இருந்தால் அது நடக்க வாய்ப்பு உண்டு…….. ஆனால் –
இங்கு தான் தேசபக்தி பின்னுக்கு தள்ளிவிடப்பட்டு,
வேறு ஏதேதோ பக்திகள் முன்வந்து நிற்கின்றனவே….. !

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

மறுமொழி

  • சக்திசொல்கிறார்:

10:22 முப இல் மார்ச் 31, 2015 (மேம்படுத்து)

அன்று விவாதத்திற்கு வராதது உண்மைதான் ஐயா. அதுமட்டுமன்றி ஒரு வார்த்தை கூடப் பேசப்படவில்லை. ஆனால் எஸ்.பி.சவான் Black Tiger எனப் பாராட்டியதையும் இந்திராகாந்தி அதை ஏற்றுக் கொண்டதையும் ஒரு பத்திரிகை கிண்டலடித்து அன்று செய்தி வெளியிட்டிருந்தது.

கௌசிக்கிடம் பின்னர் அனுப்பப்பட்ட இன்யட் மசிகா என்ற ராவின் உளவாளி இரகசியமாக குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.அதில்…
Kya Bharat jaise bade desh ke liye kurbani dene waalon ko yahi milta hai? என்று குறிப்பிருந்ததாக முன்னர் ஒருமுறை படித்திருக்கிறேன்.
சரியா தவறா எனத் தெரியவில்லை.

தவிர தியாகிகள் கௌரவிக்கப்படாதது மட்டுமல்லாமல்……
எனக்குத் தெரிந்தவரை, தமிழ் நாட்டில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தியாகிகள் ஓய்வூதியத்தை பெற பல ஆண்டுகள் அரச அலுவலகங்கள் படி ஏறி இறங்கியதையும், சிலர் அதை பெறாமலே தியாகி என்ற பெயருடன் வறுமையில் இறந்ததையும் மறக்க முடியாது.

5:15 பிப இல் ஏப்ரல் 1, 2015 (மேம்படுத்து)

sir,

i remember kappal ohtiya thamilan final song by subra maniya bharathiyaar.

what a sad situation.

rgs

yogi

3.                  புது வசந்தம் சொல்கிறார்:

3:00 பிப இல் மார்ச் 30, 2015 (மேம்படுத்து)

அரசியல் லாபத்திற்காக இங்கு வானளாவிய சிலைகள் வைக்க செலவு செய்கிறார்கள்(இன்னும் பல, நம் நண்பர்கள் அறிவார்கள்). ஆனால் நாட்டிற்காக உயிரை பணயம் வைத்த சக இந்தியனுக்கு வாய்க்கு அரிசி கூட இல்லை…என்ன ஒரு தேச பக்தி ?

மறுமொழி

4.                  Killergee சொல்கிறார்:

3:45 முப இல் மார்ச் 31, 2015 (மேம்படுத்து)

இதைப்படிக்கும் இந்தியனுக்கு இந்திய ராணுவ ஒற்றர் படையில் சேர விருப்பம் வருமா ? எவ்வளவு வேதனையான விடயங்கள் சாதாரண சினிமா நடிகனுக்கு, கிரிக்கெட் வீரனுக்கு, தரம் கெட்ட அரசியல்வாதிகளுக்கு இந்த நாட்டில் எவ்வளவு மரியாதை கிடைக்கிறது.

மறுமொழி

  1. ltinvestmentசொல்கிறார்:

9:28 முப இல் மார்ச் 31, 2015 (மேம்படுத்து)

we pray for him to rest in peace. really great information. big salute to his patriotism. thank KM sir.

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book